/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நிறைவு
/
மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நிறைவு
ADDED : ஆக 13, 2025 05:34 AM
சேலம்:பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா பால்குட ஊர்வலத்துடன் நிறைவடைந்தது.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த ஜூலை, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சி
களுடன் முடிந்து, அதன் நிறைவாக நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது.
கிச்சிபாளையம் பேச்சியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள், பால் குடங்களை தலையில் சுமந்தபடி, அம்மன் வேடமணிந்த பெண்கள் தலைமையில், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனையுடன் பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல் சிறப்பு யாக பூஜை செய்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.

