ADDED : செப் 04, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், சீலியம்பட்டியில், செல்லியம்மன், மாரியம்மன், சுருட்டையம்மன் கோவில்கள் உள்ளன.
அக்கோவிலில் கடந்த ஆக., 19ல், மாரியம்மன் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று மாரியம்மன் சுவாமி தேர் திருவிழா நடந்தது. அதற்கு, 20 அடி உயர தேரை, திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச்சென்றனர். இரவு, 7:30 மணிக்கு, தேர் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
அதேபோல் கொத்தாம்பாடி, பாரதியார் நகர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று தேர் திருவிழா நடக்கிறது.