ADDED : பிப் 05, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அழகாபுரம் மாரியம்மன் கோவில் தை திரு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம், வாசனை மலர்கள் அலங்காரம் செய்து, அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு, வீரகாரன் பிடாரி அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பலர், மாவு விளக்கு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அம்மனுக்கு கிடா காவு கொடுத்தல், பொங்கல் வைத்தல், சேத்து முட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, திரவுபதி அம்மன் திடலில் பொலி எருது ஆட்டம், கலை நிகழ்ச்சி நடக்கிறது.