/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா தெப்ப தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா தெப்ப தேரோட்டம் கோலாகலம்
மாரியம்மன் கோவில் திருவிழா தெப்ப தேரோட்டம் கோலாகலம்
மாரியம்மன் கோவில் திருவிழா தெப்ப தேரோட்டம் கோலாகலம்
ADDED : நவ 16, 2024 03:39 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில் திருவிழா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வான, தெப்ப தேரோட்ட நிகழ்ச்சி, திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்ப குளத்தில், நேற்று நடந்தது.
இதில், திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரி-யம்மன், அழகு முத்து மாரியம்மன் கோவில் உற்சவ மூர்த்திகள், மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில், குளத்தை மூன்று முறை சுற்றி வந்தனர். அப்போது, தெப்ப தேரோட்டத்தை காண வந்திருந்த பக்தர்கள், 'ஓம் சக்தி; பராசக்தி' என, பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, பாசுரங்கள் பாடியும், மந்திரங்கள் ஓதியும் அம்மனுக்கு வழிபாடு நடந்தது.இதில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகராட்சி சேர்மன் நளினி, மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்-பாபு, நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு சேர்மன் சுஜாதா, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.