/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார்த்திகை தீபத்திருவிழா சாமந்தி பூ விற்பனை ஜோர்
/
கார்த்திகை தீபத்திருவிழா சாமந்தி பூ விற்பனை ஜோர்
ADDED : டிச 02, 2025 02:21 AM
ஓமலுார், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, தினசரி சந்தையில், 10 டன் பூக்கள் நேற்று விற்பனையானது.
காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, சந்தைப்பேட்டை, காருவள்ளி, சின்னதிருப்பதி, காமலாபுரம், நாலுகால் பாலம், ஓமலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், சாமந்தி பூக்கள் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை துவங்கவுள்ளதையடுத்து, பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கு நேற்று, 10 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பூக்கள் தரத்திற்கு ஏற்ப கிலோ, 80 முதல் 110 ரூபாய் வரை விற்பனையானது.
இதுகுறித்து பூசாரிபட்டியை சேர்ந்த பூ வியாபாரி சக்திவேல் கூறுகையில்,'' இன்று (நேற்று) முகூர்த்த நாள் மற்றும் கோவில் கும்பாபிஷேக விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சாமந்திப்பூ விற்பனை அதிகரித்துள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் நாட்களில், பூக்களின் விலை மேலும் உயரக்கூடும்,'' என்றார்.

