/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விலை சரிந்ததால் குப்பைக்கு போன சாமந்தி பூ
/
விலை சரிந்ததால் குப்பைக்கு போன சாமந்தி பூ
ADDED : மார் 17, 2025 04:50 AM
சேலம்: சேலம் வ.உ.சி., மார்க்கெட்டுக்கு, பல்வேறு பகுதி
களில் இருந்து பல்வேறு வகையிலான பூக்கள் கொண்டு வரப்படு-கின்றன. குறிப்பாக தர்ம
புரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் இருந்து தினமும், 10 டன் வரை சாமந்தி பூ வரத்தாகும்.
பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் சாமந்தி கிலோ, 400 வரை விற்பனையானது. ஒரு வாரமாக சுப நிகழ்ச்சிகள் இல்-லாததால், நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சம், 50 ரூபாய் வரை விலைபோனது. நேற்று அதிகாலை சாமந்தி பூக்களை விவ-சாயிகள் கொண்டு வந்த நிலையில், 10 ரூபாய்க்கு மொத்த வியா-பாரிகள் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், 'பறிக்கும் கூலி, வண்டி வாடகை என கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு மேல் செலவு செய்த நிலையில், 10 ரூபாயை வைத்து என்ன செய்வது' என விரக்தி அடைந்தனர். இதனால் ஒரு சிலர், 1 டன் அளவிலான சாமந்தி பூக்களை அருகேயுள்ள குப்பையில் வேதனையுடன் கொட்டிச்சென்றனர்.