/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.62 லட்சத்தில் சந்தை மேம்பாடு பணி துவக்கம்
/
ரூ.1.62 லட்சத்தில் சந்தை மேம்பாடு பணி துவக்கம்
ADDED : ஜன 21, 2025 06:07 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், வியாழன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசா-யிகள், வியாபாரிகள், பொதுமக்கள் விற்க, வாங்க வருகின்றனர்.
சந்தைபேட்டையில் மண் தரையில் கடை விரித்து காய்கறி, தானியம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்கின்றனர். மழை காலங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், வாரச்சந்தை மேம்-பாட்டிற்கு, ஒரு கோடியே, 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கடைகள் வைக்க கான்கிரீட் திடல், மேற்கூரை, மின் விளக்கு, கேமரா, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்-படும்.டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் சுரேஷ்குமார் சந்தை மேம்-பாட்டு பணிகளை நேற்று துவக்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார்
மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பணி-யாளர்கள் பங்கேற்றனர்.