/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையோர கடைகளை கண்டித்து சந்தை வியாபாரிகள் மறியல்
/
சாலையோர கடைகளை கண்டித்து சந்தை வியாபாரிகள் மறியல்
ADDED : டிச 30, 2025 01:23 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரில், திங்கள் வாரச்சந்தை நேற்று வழக்கம்போல் கூடியது. சுற்றுவட்டார விவ-சாயிகள், வியாபாரிகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்-களை கொண்டு வந்தனர்.
ஆனால் அதன் சாலையோர பகுதி-களில் சிலர் கடைகள் வைத்ததால், சந்தை வளாக வியாபாரிக-ளுக்கு போதிய விற்பனை ஆகவில்லை எனக்கூறி, நேற்று மதியம், 12:30 மணிக்கு, 10 வியாபாரிகள், ஆத்துார் - பெரம்-பலுார் தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக, மேலும், 20க்கும் மேற்-பட்ட வியாபாரிகள் குவிந்தனர். வீரகனுார் போலீசார் வந்து, பேச்சு நடத்தினர். அப்போது வியாபாரிகள் கூறுகையில், 'சிலர் அனுமதியின்றி, சாலையோரம் கடைகள் வைப்பதால், டவுன் பஞ்சாயத்துக்கு சுங்க கட்டணம் செலுத்தும் எங்களுக்கு, போதிய அளவில் பொருட்கள் விற்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. சாலை-யோர கடைகளை அகற்ற வேண்டும்' என்றனர்.
அதற்கு போலீசார், 'இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்-திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்-தனர். இதையடுத்து மதியம், 1:20 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டது.

