/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடத்தப்பட்ட தொழிலாளி விடுவிப்பு த.வா.க., அமைப்பாளருக்கு வலை
/
கடத்தப்பட்ட தொழிலாளி விடுவிப்பு த.வா.க., அமைப்பாளருக்கு வலை
கடத்தப்பட்ட தொழிலாளி விடுவிப்பு த.வா.க., அமைப்பாளருக்கு வலை
கடத்தப்பட்ட தொழிலாளி விடுவிப்பு த.வா.க., அமைப்பாளருக்கு வலை
ADDED : டிச 30, 2025 01:23 AM
சேலம்: சேலம், வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், 32. அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் தொழிலாளியாக பணிபுரி-கிறார்.
நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல், அவரை கடத்-திச்சென்றது. இதுகுறித்து சீனிவாசன் மனைவி கோமதி புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர். இதை அறிந்த, கடத்தல் கும்பல், சீனிவாசனை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு சென்றது. தொடர்ந்து, சீனிவாசன் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சீனிவாசனின் தந்தை கோவிந்தராஜ். இவருக்கு, 59 சென்ட் நிலம், வேடுகாத்தாம்பட்டியில் இருந்தது. கோவிந்தராஜ் மறைந்த பின், சீனிவாசன், அவரது இரு சகோதரிகளுக்கு தெரிவிக்காமல், இளம்பிள்ளையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரம்மமூர்த்திக்கு, அந்த நில உரி-மையையும், அதை பயன்படுத்திக்கொள்ளவும், 8 லட்சம் ரூபாய்க்கு கொடுத்துள்ளார்.
இதை அறிந்த சகோதரிகள், பாகம் உள்ள நிலத்தை கொடுத்தது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு சகோதரிக-ளிடம், பிரம்மமூர்த்தி பேச்சு நடத்தி சமரசம் செய்து வைத்-துள்ளார்.
பின் இரு சகோதரிகளும், சீனிவாசனிடம் விசாரித்தபோது, பிரம்-மமூர்த்தி போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றியதாக கூறியுள்ளார். தற்போது அந்த நில மதிப்பு, 10 கோடி ரூபாய்.இதுதொடர்பாக சிலரிடம், சீனிவாசன் ஆலோசித்துள்ளார். இதை அறிந்த பிரம்மமூர்த்தி, கூட்டாளிகளை வைத்து சீனிவாசனை கடத்தி வீட்டில் வைத்து தாக்கியுள்ளார். இதனால் பிரம்மமூர்த்தி, அவரது கூட்டாளிகளான, ரவுடி வல்லரசு, விஜி, கார்த்தி, மாரிமுத்து, சிவா உள்பட, 7 பேர் மீது வழக்குப்ப-திந்து, அவர்களை தேடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

