ADDED : டிச 02, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சரஸ்வதி, அவரது மகனுக்கு பெண் தேடி வந்தார். இதனால் சேலம், அழகாபுரத்தை சேர்ந்த தரகர் செந்தில், 33, என்பவர், பெண்களின் படங்களை காட்ட, அவரது வீட்டுக்கு வந்து சென்றார்.
இந்நிலையில் அவரது பீரோவில் இருந்த, 8 பவுன் தாலிக்கொடியை காணவில்லை. சரஸ்வதி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், செந்தில் மட்டும் வந்து சென்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், நகையை திருடி அடகு வைத்து, 1.50 லட்சம் ரூபாய் எடுத்து செலவு செய்ததை ஒப்புக்கொண்டார். நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், 8 பவுன் நகையை மீட்டனர்.