/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாக்டோ -ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு
/
ஜாக்டோ -ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு
ADDED : செப் 09, 2025 01:43 AM
சேலம்,ஜாக்டோ-ஜியோ சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று பெருந்திரள் முறையீடு நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருவேரங்கன், கோவிந்தன், திருமுருகவேள் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் ஆகியோருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும்
. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 90 சதவீத பாதிப்பை உண்டாக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்து செய்தல். 2002-2004 வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர்களின் பணியை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர். இதில், நிர்வாகிகள் சுரேஷ், சங்கர், தியாகராஜன் உள்பட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை மனு, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.