தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பையில் மின் உற்பத்தி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

குப்பையில் மின் உற்பத்தி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

குப்பையில் மின் உற்பத்தி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு


ADDED : செப் 22, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் மாநகர் மேயர் ராமச்சந்திரன் தலை-மையில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்-சிலர்கள் ஒருசேர சென்று, நேற்று கலெக்டர் இளம்பகவத்திடம் வழங்கிய மனுவில் கூறியி-ருப்பதாவது:

குப்பையில் இருந்து மின் உற்பத்தி திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது, நிலம் ஒதுக்கக்கூடாது என, கடந்த ஆகஸ்டு மாத மாநகராட்சி கூட்-டத்தில், தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அந்த தீர்மானத்துக்கு எதிராக, சட்டசபை கூட்டத்-தொடரில், மின் உற்பத்தி திட்டத்தை நிறை-வேற்ற, 297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது.குறிப்பாக ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களின் குப்பை தொட்டியாக சேலம் மாநகரை மாற்றிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பல்வேறு அமைப்பினர், கவுன்சி-லர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அத்திட்டத்தை நிறைவேற்றினால், சுற்றுச்சூழ-லுக்கு பெரும்கேடு விளைவிக்கும் அபாயம் உள்-ளது.

அத்துடன் நிலத்தடி நீரும் மாசு அடைவதுடன், நாம் சுவாசிக்கும் காற்றும் மாசடைந்துவிடும். எனவே, உடனடியாக அத்திட்டத்தை அரசு கைவிட

வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அஸ்தம்-பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி, கவுன்-சிலர்கள் குமாரவேல், தமிழரசன், சசிகலா, இமய-வர்மன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us