/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ., மழை பதிவு
/
அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 19, 2025 02:08 AM
சேலம்: சேலம் மாநகர மாவட்டத்தில், நேற்று முன்தினம் பலத்த காற்-றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசி-யது. இரவில் இதமான சீதோஷ்ண நிலை
காணப்பட்டது.
அதிகபட்சமாக, சேலத்தில், 72.2 மி.மீ., மழை பதிவானது. இடைப்பாடி, 71.2, ஏத்தாப்பூர், 65,ற ஆணைமடுவு, 64, மேட்டூர், 55.4, வாழப்பாடி, 45.4, தம்மம்பட்டி, ஓமலுார் தலா, 45, நத்தக்கரை, 43, ஏற்காடு, 40.6, கரியகோவில், 35, வீரகனுார், 31, டேனிஷ்பேட்டை, 27, ஆத்துார், 26.2, கெங்கவல்லி, 20 மி.மீ., மழை பதிவானது. தற்போது கோடை காலத்தில் சில நாட்-களாக பெய்து வரும் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்-ளனர்.
மேட்டூரில் 128.6 மி.மீ.,
அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல் தொடங்கியது. இந்த கால கட்-டத்தில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக நடப்பாண்டில் மேட்டூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரு வாரத்தில், 6 நாட்களில், 128.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 55.4 மி.மீ., பதிவா-னது. கோடை மழையால் வெப்பம் தணிந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மைதானத்துக்கு பூட்டு
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சேலம் காந்தி மைதானத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்-தது. இதனால் நேற்று நுழைவுவாயில் கதவு திறக்கப்படாமல் பூட்-டியிருந்தது. இதனால் அதிகாலை, 5:00 மணிக்கு வழக்கம்போல் நடைபயிற்சிக்கு வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆத்துாரில் கனமழை
ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை, இடி, மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து கன மழையாக மாற, சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் பரவலாக மழை பெய்-தது. இரு நாட்களாக தொடர் மழையால், குளிர்ந்த சூழல் ஏற்-பட்டு மக்கள் மகிழ்ச்சிய
டைந்தனர்.
அதேபோல் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தி-யாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்து குளிர்ந்த சூழல் நிலவியது.

