/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.பல லட்சம் கடன் வாங்கியவர் மாயம்
/
ரூ.பல லட்சம் கடன் வாங்கியவர் மாயம்
ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் சாம் மகேஷ் குமார், 43.
தனியார் நிறுவன ஊழியரான இவர், தனியார் நிதி நிறுவனம், வங்கி, நண்பர்கள், உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி செலுத்தாததால், அவரது வீட்டுக்கு வந்து, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தந்துள்ளனர். இதனால் கடந்த ஜன., 27 இரவு, வீட்டில் இருந்து வெளியேறியவர், திரும்பி வரவில்லை.இதுகுறித்து அவரது மனைவி கரோலின் கயல்விழி, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 10ல் புகார் அளித்தார். நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த போலீசார் யார் யாரிடம் எல்லாம் கடன் வாங்கினார், எங்கு சென்றார் என, விசாரிக்கின்றனர்.