/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டிஜிட்டல் கிராப் சர்வே' உதவியுடன் தமிழக விவசாய நிலங்கள் அளவீடு
/
'டிஜிட்டல் கிராப் சர்வே' உதவியுடன் தமிழக விவசாய நிலங்கள் அளவீடு
'டிஜிட்டல் கிராப் சர்வே' உதவியுடன் தமிழக விவசாய நிலங்கள் அளவீடு
'டிஜிட்டல் கிராப் சர்வே' உதவியுடன் தமிழக விவசாய நிலங்கள் அளவீடு
ADDED : நவ 13, 2024 03:41 AM
மேட்டூர்:'டிஜிட்டல் கிராப் சர்வே' மூலம் விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய
அரசு உத்தரவுப்படி நாடு முழுதும் விவசாய நிலங்கள், 'டிஜிட்டல் கிராப்
சர்வே' மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, கணினியில் பதிவு செய்யப்படும்.
அதன்மூலம் ஒவ்வொரு விவசாயிகளும் எந்தெந்த பயிர்கள் சாகுபடி
செய்துள்ளனர் என, நிலத்துக்கு செல்லாமல் செயற்கைக்கோள் சிக்னல் மூலம்
கணினியில் பார்த்துக்கொள்ள முடியும்.அதற்கான பணிகளை மேற்கொள்ள
முதல்கட்டமாக, வி.ஏ.ஓ.,க்களிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. அதற்கு
கண்டனம் தெரிவித்து, வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த பணி வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில்
சேலம் மாவட்டம் கொளத்துார் ஒன்றியம் தின்னப்பட்டி ஊராட்சியில்
டிஜிட்டல் கிராப் சர்வே மூலம் நில அளவீடு பணி நேற்று முன்தினம்
தொடங்கியது. கொளத்துார் வட்டார வேளாண் அலுவலர்கள் தலைமையில்,
தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், 49 பேர், ஒரு இடத்தில், 4 முதல், 5
பேர் வீதம், 'சர்வே' பணியில் ஈடுபட்டனர். நேற்று காவேரிபுரம்
ஊராட்சியில் நிலங்களை சர்வே செய்யும் பணி நடந்தது. இதில் இடத்தை
பார்த்து, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. வரும், 21 வரை
கொளத்துார் ஒன்றியம் முழுதும், நிலங்களை சர்வே செய்யும் பணி நடக்கும்
என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.

