/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புரட்டாசியால் இறைச்சி விற்பனை சரிவு
/
புரட்டாசியால் இறைச்சி விற்பனை சரிவு
ADDED : செப் 23, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: புரட்டாசியில் பெரும்பாலோர் இறைச்சி உண்பதை தவிர்க்கின்-றனர். கடந்த, 17ல் புரட்டாசி தொடங்கிய நிலையில் வாழப்பா-டியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில், சில நாட்களாக விற்பனை சரிந்துள்ளது.
ஞாயிறான நேற்று கூட பெரும்பாலான இறைச்சி கடைகளில் சில நுகர்வோர் மட்டும் காணப்பட்டனர். பல நேரங்களில் கடைகள் வெறிச்சோடின. கிலோ ஆட்டுக்கறி, 800, பண்ணை கோழிக்கறி, 180, மீன் ரகத்தைப் பொறுத்து, 150 முதல், 250 ரூபாய் வரை விற்பனையானது.