ADDED : அக் 13, 2024 08:28 AM
சேலம்: சேலம் அழகாபுரம் பெரிய புதுார், பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, ஐங்கிரி நாதன் மனைவி தனலட்சுமி, 36. இவர் கடந்த, 7ல் டிவிஎஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள, டீக்கடை அருகே மொபட்டை நிறுத்திவிட்டு சென்றவர்,
'டயாலிசிஸ்' முடிந்தபின் வெளியே வந்தார்.அப்போது மொபட் காணவில்லை. அவர் புகார்படி, மருத்துவ-மனை போலீசார், 'சிசிடிவி' கேமராவை
ஆய்வு செய்ததில், ஒருவர் மொபட்டை திருடிச்சென்றது தெரிந்தது.விசாரணைக்கு பின், கன்னங்குறிச்சி, புது கொத்துக்கார வட்டாரம் புதுஏரியை சேர்ந்த ரமேஷ், 38,
கைது செய்யப்பட்டார். இருசக்கர வாகன மெக்கானிக் தொழில் செய்து வரும் அவர், மொபட்
திரு-டியதை ஒப்புக்கொண்டார். மொபட்டை மீட்ட போலீசார், வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என மேல் விசாரணை
நடத்துகின்றனர்.