/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசவித்த தாய் இறப்பு குறித்து மருத்துவ இணை இயக்குனர் விசாரணை
/
பிரசவித்த தாய் இறப்பு குறித்து மருத்துவ இணை இயக்குனர் விசாரணை
பிரசவித்த தாய் இறப்பு குறித்து மருத்துவ இணை இயக்குனர் விசாரணை
பிரசவித்த தாய் இறப்பு குறித்து மருத்துவ இணை இயக்குனர் விசாரணை
ADDED : டிச 17, 2024 07:26 AM
ஓமலுார்: அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய் இறந்தது குறித்து, மருத்துவ இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம், மேச்சேரி மலையனுார் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா, 23. இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து, பிரசவ வலி ஏற்பட்டு நேற்று முன்தினம் காலை ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையில் பெண்
குழந்தை பிறந்தது. அர்ச்சனா வார்டுக்கு மாற்றப்பட்ட போது, மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டார். மேலும் வலிப்பும்
ஏற்பட்டதால், அர்ச்சனாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில், அவர் இறந்து
விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து, நேற்று ஓமலுார் அரசு மருத்துவமனையில், அர்ச்சனா இறப்பு குறித்து, சேலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்
நந்தினி விசாரணை நடத்தினார். இதில், பிரசவம் பார்த்த போது வழங்கப்பட்ட மருந்துகள், அதற்கு முன் எடுக்கப்பட்ட
பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்
ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தி சென்றார். ஓமலுார் முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் உடனிருந்தார்.