/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
/
மா.திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : நவ 28, 2024 01:14 AM
மா.திறன் குழந்தைகளுக்கு
மருத்துவ முகாம்
சேலம், நவ. 28-
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் அனைத்து வட்டார வள மையங்களில், ஆண்டுதோறும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, மருத்துவ முகாம் நடத்தி, அடையாள அட்டை, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சேலம் ஊரக வட்டார வளமையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மணியனுார் அரசு பள்ளியில் நேற்று, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. அதில், 98 குழந்தைகள் பரிசோதனை செய்து கொண்டனர்.
அதேபோல் சங்ககிரியில் நேற்று நடந்த முகாமை, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் மகிழ்நன் தொடங்கி வைத்தார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகள், பஸ் பாஸ், ரயில் பாஸ் வழங்கப்பட்டன. 150 குழந்தைகள் உள்பட, 266 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.