/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ மாணவரின் புல்லட் திருட்டு
/
மருத்துவ மாணவரின் புல்லட் திருட்டு
ADDED : அக் 30, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், திருச்சி, முசிறியை சேர்ந்தவர் கவுதம், 34. சேலம் மாவட்டம் அரியானுாரில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., முதலாண்டு படிக்கிறார். 3 மாதங்களாக, அருகே உள்ள சின்ன சீரகாபாடியில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார்.
கடந்த, 26 மாலை, வீடு முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, புல்லட்டை காணவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

