/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீனாட்சி சொக்கநாதர் கோவில் புனரமைப்பு நன்கொடை மூலம் சன்னதிகள் கட்ட முடிவு

ADDED : மார் 21, 2024 02:01 AM
மேட்டூர், மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, மேற்கு நெடுஞ்சாலையோரம் மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், கும்பாபி ேஷகம் நடந்து, 35 ஆண்டாகிறது.
இதனால் அறநிலையத்துறை சார்பில், 1.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த ஜன., 24ல் புனரமைப்பு பணி தொடங்கியது. இதற்கு கடந்த, 18ல் விநாயகர் வழிபாடு, வாஸ்துபூஜை நடந்தது. நேற்று அதிகாலை முதல், 2ம் காலவேள்வி, பாலஸ்தாபன விழா, மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காலை, 9:30 மணிக்கு கோவில் வளாகத்தில் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பக்தர்களிடம், 3 கோடி ரூபாய் நன்கொடையாக திரட்டி கணபதி, காலபைரவர், துர்க்கை, நவகிரகங்கள் சந்திரன், சூரியனுக்கு தனித்தனி சன்னதிகள், மடப்பள்ளி, அலுவலகம், சுற்றுச்சுவர் உள்பட இதர, 20 பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் நன்கொடை வழங்க வங்கி கணக்கு எண், இணைய தள முகவரி, கோவில் வளாகத்தில் தனியே இரு உண்டியல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா, நகராட்சி தலைவர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.