/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை
/
நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை
ADDED : டிச 27, 2024 01:15 AM
சேலம், டிச. 27-
சேலம், தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை: அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழக உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தில் கட்டுமான தொழிலாளர் உள்பட, 18 நல வாரியங்களில், 18 முதல், 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், உரிய நல வாரியங்களில், www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம், உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
அதற்கு பின், கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் முதலான நிதியுதவி கோரி பெறப்பட்ட, தகுதியான விண்ணப்பங்கள், ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியுதவி தொகை, தொழிலாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, சில புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உணவு, வர்த்தக சேவை டெலிவிரி செய்யும், இணையம் சார்ந்த தொழிலாளர்களும், நல வாரியத்தில் பதிவு செய்த பின் அனைத்து சலுகைகளும் பெற முடியும். வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களும், நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், அரசு மருத்துவ கல்லுாரியில் உயர்கல்வி படிப்பவராக இருந்தால், ஆண்டுக்கு, 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தமிழக கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள், 2024 - 2025ம் ஆண்டுக்கு, ஆயுள் சான்றிதழை, http://www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம்.