/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு
ADDED : அக் 10, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனநலம் பாதிக்கப்பட்டவர்
மர்மமான முறையில் சாவு
நங்கவள்ளி, அக். 10-
நங்கவள்ளி, பெரியசோரகை வைரன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், 35. திருமணமாகாத இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நெஞ்சுவலியால், ஒரு வாரமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த அவர், ஒரு அறை உள்ளே சென்று தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டார். வெளியே வருவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது தந்தை வெள்ளப்பிள்ளை புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.