/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 28, 2025 03:51 AM
காரிப்பட்டி: வாழப்பாடி,
 கோலாத்துக்கோம்பையை சேர்ந்தவர் செல்வம், 55. இவரது கிணற்றில், ஒரு 
சடலம் மிதப்பதாக, வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு, நேற்று மாலை, 
6:30 மணிக்கு, தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள், கயிறு மூலம் 
சடலத்தை மீட்டனர். காரிப்பட்டி போலீசார் விசாரித்ததில் கிருஷ்ணகிரி 
மாவட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்த தினகரசு, 20, என தெரிந்தது.
மேலும்
 விசாரணையில், தினகரசுவின் பெற்றோர், கோலாத்துக்கோம்பையில் 
சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில்  தங்கி வேலை 
செய்வதும், தினகரசு மனநலம் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்தது. நேற்று 
முன்தினம் வீட்டை விட்டு சென்ற தினகரசு, அப்பகுதியில் நடந்து 
சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய
வந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

