/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வணிக வளாகத்தை மறைத்து தகரம் ஒப்பந்ததாரரால் வியாபாரிகள் அதிர்ச்சி
/
வணிக வளாகத்தை மறைத்து தகரம் ஒப்பந்ததாரரால் வியாபாரிகள் அதிர்ச்சி
வணிக வளாகத்தை மறைத்து தகரம் ஒப்பந்ததாரரால் வியாபாரிகள் அதிர்ச்சி
வணிக வளாகத்தை மறைத்து தகரம் ஒப்பந்ததாரரால் வியாபாரிகள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 10, 2025 01:27 AM
ஆத்துார், ஆத்துார் நகராட்சி யின் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாகம் உள்பட, 109 கடைகள், 4 கோடி ரூபாயில் கட்டப்பட்டன. இந்த கடைகள் ஏலம் கடந்த ஜூன், 24ல் நடந்தது. பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் உள்ள, 60 கடைகளில், 10 கடைகள், 37 பழக்கடைகள், மற்ற கடைகள், 3 என, 50 கடைகள் ஏலம் விடப்பட்டது. இன்னும், 62 கடைகள் ஏலம் விடப்பட வேண்டும். இந்த வணிக வளாக கட்டட பணியை, 'வி.எஸ்., அசோசியேட்' எனும், கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது.
கட்டுமானப்பணிக்கு நிலுவை தொகை வழங்காமல் உள்ளதாக கூறி, அதன் ஒப்பந்ததாரர் நேற்று, வணிக வளாகம் முன், தகர சீட் வைத்து, கடைகளை மறைத்தார். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறுகையில், ''இதுகுறித்து தெரியவில்லை. விசாரிக்கப்படும்,'' என்றார்.