/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
/
மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : டிச 25, 2024 02:10 AM
மேட்டூர், டிச. 25-
மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் கட்டி, 30 ஆண்டுக்கு மேலானதால், அவற்றை இடித்து அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்ட, நகராட்சி முடிவு செய்தது. அதற்கு பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
தொடர்ந்து நகர மேம்பாட்டு திட்டத்தில், நகராட்சி நிதி, 60 லட்சம் உள்பட, 6.40 கோடி ரூபாய் செலவில், 69 கடைகள் கட்டும் பணி கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
தற்போது பணி முடிந்து, பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதற்கான தேதி அறிவிக்கவில்லை. அங்கு, 69 கடைகள், உணவகம் கட்டப்பட்டுள்ளன.
அருகே வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளன. கடைகள் ஏலம் வரும், 27ல் மேட்டூர் நகராட்சியில் நடக்கவிருந்தது. ஆனால் வைப்பு தொகை, வாடகை அதிகம் இருப்பதாக வியாபாரிகள், கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இதனால் கடைகள் ஏலத்தை, நகராட்சி நிர்வாகம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
பஸ்களுக்கு சுங்க வசூல் உரிமம், கழிப்பிட கட்டண வசூல் உரிமம், வாகன நிறுத்துமிட ஏலம், பஸ்கள் வரும், செல்லும் நேரத்தை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் உரிமம், பூக்கடை உரிம ஏலம் ஆகியவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.