/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 1,960 கன அடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 1,960 கன அடியாக சரிவு
ADDED : டிச 26, 2024 03:11 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பி-டிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் மேட்டூர் அணை நீர்-வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த, 4ல், 32,240 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5ல், 25,098 கன அடி; 6ல், 14,404; 7ல், 9,601; 9ல், 5,793; 20ல், 3,004; 22ல், 2,886 கன அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,701 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 1,960 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு, 500 கன அடி, கால்வாயில், 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 119.41 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 119.46 அடியாக சற்று அதிகரித்-தது. நீர் இருப்பு, 92.61 டி.எம்.சி.,யாக இருந்தது.

