/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக உயர்வு
ADDED : ஆக 31, 2025 07:16 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கிறது. கடந்த, 28ல் வினாடிக்கு, 6,316 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வ-ரத்து, நேற்று முன்தினம், 8,354 கனஅடி, நேற்று, 9,828 கனஅடி-யாக அதிகரித்தது.
அணையில் இருந்து வினாடிக்கு, 15,000 கனஅடி நீர், மின் உற்-பத்தி நிலையங்கள் வழியே டெல்டா பாசனத்துக்கும், 850 கன-அடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து குறைவாக உள்ளதால், நேற்று முன்தினம், 119 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 118.65 அடியாக சரிந்தது. கடந்த, 5 நாட்களில் அணை நீர்-மட்டம், 2 அடி, நீர் இருப்பு, 2 டி.எம்.சி., சரிந்துள்ளது.