/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 25 கன அடியாக கடும் சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 25 கன அடியாக கடும் சரிவு
ADDED : பிப் 10, 2024 04:33 PM
மேட்டூர் : மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால் அணை நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஜன., 22ல் வினாடிக்கு, 1,250 கனஅடியாக இருந்த நீர்வரத்து கடந்த, 6ல், 116 கனஅடி, 7 ல், 48 கனஅடி, நேற்று முன்தினம், 83 கனஅடியாக குறைந்தது. நேற்று, 25 கன அடியாக கடுமையாக சரிந்தது.அணையில் இருந்து தற்போது பாசனம், குடிநீருக்கு வினாடிக்கு, 5,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த, 24ல், 70.81 அடியாக இருந்த நீர்மட்டம், 67.07 அடியாக நேற்று சரிந்தது. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நேற்று கே.ஆர்.எஸ்.,க்கு, 329, கபினிக்கு, 78, ேஹரங்கிக்கு, 212, ேஹமாவதிக்கு, 102 என, நான்கு அணைகளுக்கும் மொத்தம், 721 கனஅடி நீர் மட்டுமே வந்தது.