/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
22 நாள் முழு கொள்ளளவில் மேட்டூர் அணை நீர்மட்டம்
/
22 நாள் முழு கொள்ளளவில் மேட்டூர் அணை நீர்மட்டம்
ADDED : ஜன 06, 2025 02:30 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். ஜூன், 12ல் நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூனில், 43.52 அடி நீர் மட்டுமே இருந்ததால், தாமத-மாக ஜூலை, 30ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அன்று முதல், ஆக., 8 வரை, 10 நாட்கள், முழு கொள்ள-ளவில் (௧௨௦ அடி) நீர்மட்டம் நீடித்தது. அதேபோல் ஆக., 12 முதல், 20 வரை ஒன்பது நாட்களும், டிச., 31 முதல், ஜன., 2 வரை மூன்று நாட்களும் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்-தது. இதன்மூலம், 22 நாட்கள் முழு கொள்ளளவில் நீடித்துள்-ளது.118 அடியாக சரிவு
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த டிச., 31ல் மேட்டூர் அணை நிரம்பியது. நேற்று முன்தினம், 1,128 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 1,307 கனஅடியாக சற்று அதிகரித்தது. மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 12,000 கன அடியாக இருந்தது. வரத்தை விட திறப்பு அதிகரிப்பால், 119.14 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 118.52 அடியாக சரிந்தது.