/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 12,181 கனஅடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 12,181 கனஅடியாக சரிவு
ADDED : ஜூன் 24, 2025 01:15 AM
சேலம், மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 12,181 கனஅடியாக சரிந்தது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தீவிரமடைந்த தென்மேற்கு பருவ மழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. அதற்கேற்ப, 4 நாட்களுக்கு முன்பு கபினியில் இருந்து வினாடிக்கு, 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அந்த நீரின் ஒரு பகுதி வந்தடைந்ததால் கடந்த, 20ல் வினாடிக்கு, 8,218 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த, 21 மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 22,469 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, கடந்த இரு நாட்களாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கபினியில் திறந்த நீர் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 21,200 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று காலை, 8:00 மணிக்கு, 18,068 கனஅடியாகவும், மாலை, 4:00 மணிக்கு, 12,181 கனஅடியாகவும் குறைந்தது. நீர்திறப்பை விட, வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம், 114.06 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை, 113.87 அடியாக சரிந்தது.