/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 18,800 கனஅடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 18,800 கனஅடியாக சரிவு
ADDED : செப் 09, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 23,300 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று காலை, 8:00 மணிக்கு, 18,800 கனஅடியாக சரிந்தது.
இதில், 18,000 கனஅடி நீர் அணை மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்துக்கும், 800 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் வெளியேற்றப்பட்டது. நேற்று, 7 வது நாளாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியில் நீடித்தது.