/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 5,978 கனஅடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 5,978 கனஅடியாக சரிவு
ADDED : ஆக 28, 2025 01:23 AM
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 20ல் நடப்பாண்டில், 5ம் முறை நிரம்பிய மேட்டூர் அணை, நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, 119.90 அடியாக சரிந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, 7,643 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு, 5,978 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து இரு நாட்களாக டெல்டா பாசனத்துக்கு, 12,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 850 கனஅடி என, 12,850 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம் மாலை, 119.90 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று மாலை, 119.52 அடியாக சரிந்தது.

