/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 25 நாளுக்கு பின் 1 அடி சரிவு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 25 நாளுக்கு பின் 1 அடி சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 25 நாளுக்கு பின் 1 அடி சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 25 நாளுக்கு பின் 1 அடி சரிவு
ADDED : பிப் 21, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஆண்டு ஜூலை, 30ல் அணை நிரம்பியது. கடந்த ஜன., 28ல், 4,000 கனஅடியாக இருந்த டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம், 26ல், 111.21 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 27ல், 110.98 அடியாக சரிந்தது. அதற்கு பின் நேற்று முன்தினம், 110 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 109.96 அடியாக சரிந்தது. 25 நாட்கள் அணை நீர்மட்டம், 110 அடியில் நீடித்தது. நீர் இருப்பு, 78.35 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 167 கனஅடி நீர் வந்தது.