/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.32 அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.32 அடியாக உயர்வு
ADDED : டிச 24, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் அணை நீர்மட்டம்119.32 அடியாக உயர்வு
மேட்டூர், டிச. 24-
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 119.32 அடியாக சற்று உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், கடந்த இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 2,886 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் பாசனத்துக்கு, 500 கனஅடி, கால்வாயில், 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 119.22 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 119.32 அடியாக சற்று உயர்ந்தது.