ADDED : ஆக 13, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 10ல், அணைக்கு வினாடிக்கு, 9,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம், 8,776 கனஅடியாக சரிந்தது. அதற்-கேற்ப வினாடிக்கு, 14,500 கனஅடியாக இருந்த அணை பாசன நீர் திறப்பு, நேற்று முன்தினம் காலை, 7,500 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா எல்லையில் பெய்த மழையால் நேற்று காலை மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 16,288 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 7,500 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

