/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்திறப்பு 10,000 கனஅடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்திறப்பு 10,000 கனஅடியாக உயர்வு
ADDED : ஆக 14, 2025 02:43 AM
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 14,000 கனஅடியாக இருந்த அணை டெல்டா நீர்திறப்பு, கடந்த, 11ல், 10,000 கனஅடி, தொடர்ந்து, 7,000 கனஅடி என படிப்படியாக குறைக்கப்பட்டது.
அதேநேரம், 11ல் வினாடிக்கு, 8,776 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 12ல், 16,288 கனஅடியாக அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த, 11 முதல் நேற்று மதியம் வரை, வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த பாசன நீர்திறப்பு, நேற்று மாலை, 4:00 மணி முதல், 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த, 11ல், 118.20 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. ஆனால் தற்போது, நீர்திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், இரு நாட்களுக்கு பின் நேற்று காலை, 8:00 மணிக்கு மீண்டும், 119.02 அடியாக உயர்ந்தது.