/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 6,000 கனஅடியாக குறைப்பு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 6,000 கனஅடியாக குறைப்பு
ADDED : நவ 17, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த, 5ல் வினாடிக்கு, 18,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பாசன நீர் தேவை குறைந்ததால், 6 காலை, 10:00 மணிக்கு, நீர்திறப்பு வினா-டிக்கு, 15,000 கனஅடி; 12 காலை, 14,000 கனஅடி; 13ல், 12,000 கனஅடி என குறைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால், நேற்று காலை, 9:00 மணிக்கு டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 9,000 கனஅடியாக வும், மாலை, 6:00 மணிக்கு, 6,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 112.11 அடி, நீர்இருப்பு, 81.44 டி.எம்.சி.,யாக இருந்தது. வினா-டிக்கு, 6,026 கனஅடி நீர் வந்தது.

