/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஆக 23, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் :மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 30,850 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, 23,850 கனஅடியாக சரிந்தது.
அதற்கேற்ப நேற்று முன்தினம் மாலை, வினாடிக்கு, 30,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று காலை, 10:00 மணி முதல், வினாடிக்கு, 23,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதில் டெல்டா பாசனத்துக்கு, 16,500 கனஅடி, உபரியாக, 6,500 கனஅடி வீதம்
வெளியேற்றப்பட்டது.