/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிகளை நிரப்ப கூடுதல் நீர் மேட்டூர் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
ஏரிகளை நிரப்ப கூடுதல் நீர் மேட்டூர் எம்.எல்.ஏ., கோரிக்கை
ஏரிகளை நிரப்ப கூடுதல் நீர் மேட்டூர் எம்.எல்.ஏ., கோரிக்கை
ஏரிகளை நிரப்ப கூடுதல் நீர் மேட்டூர் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 23, 2025 01:30 AM
மேட்டூர், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், சேலம் ஏரிகள் பாசன திட்டத்துக்கு, மேட்டூர் அணை அருகே திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தை நேற்று பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., அரசு, 565 கோடி ரூபாய் ஒதுக்கி, 100 ஏரிகள் பாசன திட்டத்தை தொடங்கியது. பின், தி.மு.க., அரசு மேலும், 100 கோடி ரூபாய் ஒதுக்கி, இத்திட்டத்தை செயல்படுத்தியது. இதில், 100 ஏரிகள் பாசனம் பெறும் என்றாலும் முதல்கட்டமாக, 79 ஏரிகளுக்கு மட்டும் உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது. படிப்படியாக விரிவுபடுத்த வேண்டும்.
தற்போது நீரேற்று நிலையத்தில் வினாடிக்கு, 23 கனஅடி நீர் சோதனை முறையில் எடுத்து ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கும் அதே நேரத்தில், சேலம் மாவட்ட ஏரிகளை நிரப்ப, ஆண்டுக்கு, 2 டி.எம்.சி., நீர், கூடுதலாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சேலம் மாவட்ட ஏரிகளிலும், தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.