/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் பாதாள சாக்கடை பணி; ஒப்பந்த அடிப்படையில் பரா-மரிப்பு
/
மேட்டூர் பாதாள சாக்கடை பணி; ஒப்பந்த அடிப்படையில் பரா-மரிப்பு
மேட்டூர் பாதாள சாக்கடை பணி; ஒப்பந்த அடிப்படையில் பரா-மரிப்பு
மேட்டூர் பாதாள சாக்கடை பணி; ஒப்பந்த அடிப்படையில் பரா-மரிப்பு
ADDED : நவ 05, 2024 06:34 AM
மேட்டூர்: மேட்டூர் பாதாள சாக்கடை பணி, மூன்று மாத ஒப்பந்த அடிப்ப-டையில் பராமரிப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் நகராட்சியில், 568 சாலைகளில், 14,520 வீடுகள் உள்-ளன. இதில், 62,619 பேர் வசிக்கின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேட்டூர் நகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணி, 73.08 கோடி ரூபாயில் கடந்த, 2013-14ல் துவங்-கியது.
பணிகள் கடந்த, 2019ல் நிறைவடைந்து பாதாள சாக்கடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பாதாள சாக்கடை பணி-களை இயக்குதல், பராமரிப்பு பணியை, ஐந்து ஆண்டுகள் குடிநீர் வடிகால் வாரியம் செய்ய வேண்டும். தற்போது குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நகராட்சி நிர்வா-கமே பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால், பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்கள் இல்லை.எனவே, தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில், 14.90 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நக-ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.