/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு
/
மேட்டூர் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு
ADDED : அக் 20, 2024 04:10 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் நிரம்பிய மேட்டூர் அணையில், பாசனத்துக்கு நீர் திறந்ததால் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த, 13ல், 89.26 அடியாக இருந்த அணை நீர்மட்டம், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 19,090 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 18,384 கனஅடியாக சற்று குறைந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்-டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்-தினம், 94.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 95.88 அடியாக உயர்ந்தது. 6 நாட்களில் அணை நீர்மட்டம், 6 அடி அதி-கரித்துள்ளது.
கால்வாய்
மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் கடந்த, 14ல் வினாடிக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழையால், 15ல் நீர்திறப்பு, 300 கனஅடியாக குறைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை, 8:00 மணி முதல், 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.