/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை: திருமா விளக்கம்
/
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை: திருமா விளக்கம்
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை: திருமா விளக்கம்
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை: திருமா விளக்கம்
ADDED : ஆக 10, 2025 02:29 AM
வீரபாண்டி, வீரபாண்டி, ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி சிட்டனுார் கொல்லப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இப்பள்ளி, கே.ஆர்.தோப்பூர் - இளம்பிள்ளை பிரதான சாலையை ஒட்டி உள்ள நிலையில், தொடர்ந்து வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
இடைவேளை நேரங்களில் மாணவர்கள் விளையாடும்போதும், தின்பண்டங்களை வாங்க அருகே உள்ள கடைகளுக்கும், பிரதான சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, உரிய தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
அரூர், ''பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நான் அவமதிக்கவில்லை. அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், அரூர் கச்சேரிமேட்டில், மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமையில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
முதல், முதலாக தமிழகத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், 27 லட்ச ரூபாய் தேர்தல் நிதி வழங்குகிற நிகழ்ச்சி நடந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே, 27 லட்சம் ரூபாய் வழங்கிய, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. தேர்தலிலே மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டால், 27 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரம் செலவுக்கு கூட போதாது. தி.மு.க.,வோடு ஒப்பிட்டால் ஒரு நொடிக்கு கூட போதாது.
இந்த ஆண்டு என் பிறந்த நாள் கருப்பொருள், ' மதச்சார்பின்மை காப்போம்' என்பதுதான். பா.ஜ., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளோடு, அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்திருக்கிறது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது.பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நான் அவமதிக்கவில்லை.
அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. தமிழக அரசியல், கருணாநிதி எதிர்ப்பு என்பதையே மையமாக கொண்டு பல ஆண்டுகளாக இயங்கியிருக்கிறது என்பதை சொல்வதற்காக, ஒரு ஒப்பீடு செய்தேன் அவ்வளவு தான். இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம், மணி எம்.பி., மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

