/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2025 02:26 AM
சேலம்: அ.தி.மு.க.,வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மாநகர் மாவட்ட செயலர் வெங்க-டாஜலம் தலைமையில் கட்சியினர், 4 ரோட்டில் இருந்து பேரணி-யாக, அண்ணா பூங்கா அருகே உள்ள மணிமண்டபத்துக்கு சென்-றனர். அங்கு, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர். கட்சியினர், மக்களுக்கு இனிப்பு, அன்ன-தானம் வழங்கப்பட்டன.
அமைப்பு செயலர் சிங்காரம், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்-திவேல், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்க-டாசலம், மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், யாதவமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார், காமராஜர் சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்தனர். இதில் எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, நகர செயலர் மோகன், தலைவாசல் ஒன்றிய செயலர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேட்டூர் நகராட்சி, கொளத்துார், மேச்சேரி ஒன்றியம், வீரக்கல்-புதுார் டவுன் பஞ்சாயத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டா-டப்பட்டது. மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத், மாவட்ட வக்கீல் அணி செயலர் சித்தன், ஒன்றிய செயலர்கள் சந்திரசேகரன், செல்வம், சுப்ரமணியன், செல்வராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் வெங்கடாசலம், ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலைய-ரசன், டவுன் பஞ்சாயத்து செயலர்கள் ராஜரத்தினம், குமார் உள்-ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஓமலுாரில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள் அசோகன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் பங்கேற்றனர்.
தாரமங்கலத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்-தனர். அமைப்பு செயலர் செம்மலை, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர-ராஜன், மணி, ஒன்றிய செயலர்கள் காங்கேயன், மணிமுத்து, நகர செயலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலர் சிவக்குமாரன் மலர் துாவி மரியாதை செலுத்தினர். கொங்கணாபுரத்தில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மணி, டவுன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் பழனிசாமி, ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும், இடைப்பாடியில், நகர செயலர் முருகன், நக-ராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், கவுன்சிலர் நாராயணன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை கொண்-டாடினர்.