ADDED : ஆக 10, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், கொத்தாம்பாடியில், 17 அடி உயர முனீஸ்வரன் கோவில் உள்ளது. அங்கு விநாயகர், கருப்புசாமி, சமயபுரத்து மாரியம்மன், எமதர்மர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. அங்கு, 33ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று தொடங்கியது.
அதில் முனீஸ்வர சுவாமிக்கு, பக்தர்கள் கொண்டு வந்த, 500 லிட்டர் பாலால் அபிேஷகம் செய்து வழிபாடு செய்தனர். பின் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

