/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தளவாட பொருள் திருடியவரை சுற்றிவளைத்த மில் உரிமையாளர்
/
தளவாட பொருள் திருடியவரை சுற்றிவளைத்த மில் உரிமையாளர்
தளவாட பொருள் திருடியவரை சுற்றிவளைத்த மில் உரிமையாளர்
தளவாட பொருள் திருடியவரை சுற்றிவளைத்த மில் உரிமையாளர்
ADDED : செப் 27, 2025 01:27 AM
சங்ககிரி, சங்ககிரி, மொத்தையனுார், அத்திக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். அதே பகுதியில் கல் அரைக்கும் நிறுவனம் வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியில், பேரலில் வைக்கப்பட்டிருந்த, 1.5 கிலோ கொண்ட இரும்பு குண்டுகள், 3, 4 குதிரைத்திறன்கள் கொண்ட மின் விசை மோட்டார்கள், ஸ்பிரிங் பட்டை, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது, கடந்த, 17ல் தெரியவந்தது. அவர் அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 3 பேர் திருடிச்சென்றது தெரிந்தது.
அதே பகுதியில் நேற்று, இருசக்கர வாகனத்தில், 3 பேர் நின்றிருந்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர் அளித்த தகவல்படி, அங்கு வந்த செல்லப்பன், மக்கள் உதவியுடன், அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
அவரிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், படைவீடு, சாமாண்டூரை சேர்ந்த அஜய் என்பதும், தப்பி ஓடியவர்கள், தீபன், நந்தகுமார் என்பதும் தெரிந்தது. அஜய்யை, அவரது மொபட்டுடன், சங்ககிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர்.