ADDED : நவ 05, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. அங்கு பணிபுரியும், 25 தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து, 125ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்களை, மில் நிர்வாகத்தினர் தற்காலிக பணி நீக்கம் செய்தனர். இதை கண்டித்து நேற்று சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில், மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோஷம் எழுப்பினர். திரளானோர் பங்கேற்றனர்.
