ADDED : நவ 05, 2026 02:06 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மத்திய சிறை, 19வது பிளாக்கில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு கைதிகள், சிறை சுவரில் சார்ஜர் போட, மொபைல் போன் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இருந்து, 2 மொபைல் போன், 4 பேட்டரி, சிம் கார்டு, சார்ஜர், டேட்டா கேபிள் தலா ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும் மொபைல் பயன்படுத்திய கைதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிக்கிய பார்த்திபன், 21, தாமோதரன், 26, என தெரிந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
