ADDED : நவ 05, 2026 02:05 AM
சேலம்: தீபாவளியை முன்னிட்டு சேலம் மாநகரில் நெரிசலை குறைக்க, இன்று முதல், வரும், 9 வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீசார் அறிக்கை:பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மேட்டூர், ஓமலுார் மார்க்கமாக சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள், 'டி - மார்ட்' மேம்பாலம் வழியே வர வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர் மார்க்கத்தில் வரும் பஸ்கள், குரங்குச்சாவடி வந்து, 'டி-மார்ட்' மேம்பாலம் வழியில் வர வேண்டும்.
அதேபோல் சென்னை, கடலுார், விழுப்புரம், ஆத்துார் மார்க்க பஸ்கள், டன்லப் சந்திப்பு, கணேஷ் காலேஜ், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குச்சாவடி வந்து, 'டி - மார்ட்' மேம்பாலத்தில் வர வேண்டும். கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, நாமக்கல் மார்க்க பஸ்கள், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குச்சாவடி வந்து, 'டி - மார்ட்' வழியே வரவேண்டும்.
பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மேட்டூர், ஓமலுார் மார்க்க பஸ்கள், புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம் வழியே செல்ல வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, நாமக்கல் மார்க்க பஸ்கள், 3 ரோடு, திருவாக்கவுண்டனுார் பைபாஸ் வழியே செல்ல வேண்டும். நகர பஸ்கள் வழக்கம்போல் செல்லலாம்.
