ADDED : நவ 05, 2026 02:05 AM
சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு, தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வசதியாக, சேலம் அரசு மருத்துவமனையில், 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
இந்த வார்டில், 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட உதவியாளர்கள் பணியில் இருப்பர். தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் உள்ளன. பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கும், சிறப்பு நிபுணர்கள் தயாராக உள்ளனர். இருப்பினும் மக்கள் பட்டாசு வெடிக்கும்போது, தீயணைப்புத்துறை அறிவுரைகளை கடைப்பிடித்து விழிப்புடன் வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால், குளிர்ந்த நீரால் கழுவி உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். குழந்தைகள், குடும்பத்தினரின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
